அவங்க ரெண்டு பேரும்தான் என்னோட பேட்டிங் ஹீரோஸ்

தன்னுடைய தந்தையிடம் இருந்து பொறுமை உள்ளிட்ட குணங்களை தான் கற்றதாகவும் அதை தற்போதுவரை தனது வாழ்க்கையில் கடைபிடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

அவங்க ரெண்டு பேரும்தான் என்னோட பேட்டிங் ஹீரோஸ்

தனது பேட்டிங் ஹீரோக்கள் என்றால் அது முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தான் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

ஆனால் தன்னுடைய ரியல் லைஃப் ஹீரோ தன்னுடைய தந்தை ரமேஷ் டெண்டுல்கர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய தந்தையிடம் இருந்து பொறுமை உள்ளிட்ட குணங்களை தான் கற்றதாகவும் அதை தற்போதுவரை தனது வாழ்க்கையில் கடைபிடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

தான் தன்னுடைய இளம்வயதில் கிரிக்கெட் விளையாட விரும்பியபோது தன்னுடைய பேட்டிங் ஹீரோக்களாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இருந்ததாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

சுனில் கவாஸ்கர் பல வருடங்கள் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் தன்னுடைய ரியல் லைஃப் ஹீரோ என்றால் அது தன்னுடைய தந்தை தான் என்றும் அவர் கூறியுள்ளார். அவரிடம் இருந்துதான் பொறுமை உள்ளிட்ட குணங்களை கற்று தற்போதுவரை பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்கம் துவங்கியது முதல் 1000 குழந்தைகளுக்கு ஸ்ரீ சத்யசாய் சஞ்சீவனி மருத்துவமனை மூலம் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர், மருத்துவமனையின் செயல்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன் குழந்தைகள்தான் நமது சொத்து என்றும் கூறினார். 

வாழ்க்கையில் மாற்றம் இதன்மூலம் அந்த குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகை ஏற்படுத்தியதுடன், பெரிய அளவில் கனவு கண்டு அந்த கனவுகளை துரத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளதாகவும் அவர் பாராட்டினார். மேலும் அவர்கள் வாழ்க்கையில் மட்டுமின்றி அவர்களை சூழ்ந்தவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.