பந்து தரமில்லாததா ? சூடு பிடிக்கும் கோலியின் விமர்சனம்..!

இந்திய அணியின் தோல்விக்கு ஆடுகளம் மற்றும் எஸ்.ஜி பந்து தான் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் பந்துவீச்சாளர் அஸ்வின் குற்றம்சாட்டியுள்ளனர்.

பந்து தரமில்லாததா ? சூடு பிடிக்கும் கோலியின் விமர்சனம்..!

முதல் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு பந்தின் தரம் தான் காரணமா என்ற வாதம் வலுக்க தொடங்கியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக முதல் 2 நாட்கள் ஆடுகளம் பந்துவீச்சுக்கு கைகொடுக்கவில்லை. மீத நாட்களில் அப்படியே பந்துவீச்சுக்கு சாதகமானது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு ஆடுகளம் மற்றும் எஸ்.ஜி பந்து தான் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் பந்துவீச்சாளர் அஸ்வின் குற்றம்சாட்டியுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் 'கூக்கபுரா', இங்கிலாந்தில் 'டியூக்' வகை பந்துகள் பயன்படுத்தப்படும். இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பான எஸ்.ஜி பந்துகள் தான் பயன்படுத்தப்படும். 

அந்தவகையில் சென்னை டெஸ்டில் எஸ்.ஜி., வகை பந்து பயன்படுத்தப்பட்டது. இது, விரைவில் உறுதித்தன்மையை இழந்து விடும் என கூறப்படுகிறது.

சென்னை டெஸ்டில் முதல் 40 ஓவர்களில் எஸ்.ஜி. பந்தின் தையல் பிரிந்து விட்டது. இதைப் பிடித்து பந்தை சுழற்றுவது சிரமமாக இருந்தது. 80 ஓவருக்குப் பின் தான் புதிய பந்து தரப்படும் என்பதால் வேறு வழியில்லாததால் சேதமான பந்துடன் இந்திய பவுலர்கள் போராடினர்.

முதல் டெஸ்ட் குறித்து பேசிய அஸ்வின் , எஸ்.ஜி., பந்துகளின் தையல் இது போல பிரிந்து இதற்கு முன் பார்த்தது இல்லை. முதல் இரு நாட்களில் ஆடுகளம் எவ்வளவு வலிமையாக இருந்தது என்பதற்கு இது தான் சான்று. 2வது இன்னிங்சில் 35-40 ஓவர்களில் தையல் வெளியே வந்து விட்டது என்றார்.

வீரர்களின் குற்றச்சாட்டு குறித்து பேசிய எஸ்.ஜி நிறுவன இயக்குநர் பராஸ் ஆனந்த் , வீரர்களின் ஆலோசனை ஏற்று சொர சொரப்பான ஆடுகளங்களுக்கு ஏற்ப பந்தின் தரத்தை உயர்த்த முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார். எனினும் அவர் பந்தின் தயாரிப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தின் முதல் நாள் முதலே பந்து நல்ல டேர்னிங் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ரன் குவிப்பு குறைவாக இருக்கும். எனவே எஸ்.ஜி பந்தில் வீரர்கள் கூறிய குற்றச்சாட்டு சரி செய்யப்படுமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.