வாழ்க்கையை முடக்கி போட்ட "அந்த" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி  சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஹைதராபாத் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

வாழ்க்கையை முடக்கி போட்ட "அந்த" நாட்கள்.. ஒரே மேட்சில் தாண்டவம் ஆடிய இளம் வீரர்..

ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து உள்ளார்.

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி  சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஹைதராபாத் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

ஆனால் கொல்கத்தா அணியோ டாஸ் தோல்வி அடைந்தாலும் கூட கவலையே இன்றி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. பவர் பிளேவிலேயே ஹைதராபாத் மீது கொல்கத்தா அணி கடுமையாக அழுத்தம் கொடுத்தது.

கொல்கத்தா அணிக்காக நிதிஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் ஓப்பனிங் இறங்கினார்கள். இதற்கு முன்பெல்லாம் சுனில் நரேன், ராகுல் திரிப்பாதி போன்றவர்களை கொல்கத்தா அணி ஓப்பனிங் இறக்கி டெஸ்ட் செய்தது. ஆனால் இன்று நிதிஷ் ராணா கொல்கத்தா அணி மூலம் ஓப்பனிங் இறக்கப்பட்டார்.

ராணாவுடன் ஓப்பனிங் இறங்கிய கில் நிதானமாக ஆடி வந்தாலும் இன்னொரு பக்கம் ராணா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டினார். 

பவர் பிளேவில் 2க்கும் அதிகமான பீல்டர்கள் வெளியே இல்லாததை பயன்படுத்தி நிதிஷ் ராணா வெளுத்து வாங்கினார். புவேனஸ்வர் குமார் தொடங்கி சந்தீப் சர்மா வரை எல்லோரின் ஓவரில் ராணா மாஸ் காட்டினார்.

இதற்கு முன் கொல்கத்தா அணிக்காக ஓப்பனிங் இறங்கிய ராணா சில போட்டிகளில் மட்டுமே நன்றாக ஆடி இருக்கிறார். ஆனால் நேற்று ஓப்பனிங் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டதை பயன்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார். 

கடந்த ஒரு மாதமாக இவரின் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடந்தன. போன மாதம்தான் இவருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஒரு மாதமாக பயிற்சி எடுக்காமல் இவர் மருத்துவமனையிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின் மீண்டும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். 

இதனால் வெறும் 2 நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்துவிட்டு இன்று பேட்டிங் செய்ய ராணா வந்தார். ஆனால் பயிற்சி இல்லாமலே ராணா இன்று சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0