அணியில மாற்றம்... தொடரை கைப்பற்றும் தீவிரத்தில் இந்திய அணி!

கடந்த போட்டியில் இரு அணிகளிலும் தலா இரு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அணியில மாற்றம்... தொடரை கைப்பற்றும் தீவிரத்தில் இந்திய அணி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இந்தியாவிற்கு வெற்றியில் முடிந்துள்ளது.

புனேவில் கடந்த 23ம் தேதி இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று புனேவிலேயே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா இந்த தொடரை கைப்பற்றும்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி புனேவின் எம்சிஏ மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. 
கடந்த 23ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரை கைகொள்ளும். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 6வது ஒருநாள் தொடரை வெற்றி பெற்ற சாதனையை நிகழ்த்தும். 

கடந்த 2005 -06, 2008 -09, 2011 -12, 2012 -13 மற்றும் 2016 -17 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களை இந்தியா தொடர்ந்து வெற்றி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியில் இரு அணிகளிலும் தலா இரு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்த இரு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் தனது சர்வதேச ஒருநாள் அறிமுக போட்டியில் இன்றைய தினம் விளையாடவுள்ளார்.

இதேபோல, ரோகித் சர்மா விளையாடாத பட்சத்தில் ரிஷப் பந்த் விளையாட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர்கள் க்ருணால் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பங்கும் இன்றைய போட்டியில் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல கடந்த போட்டியில் 56 ரன்களை அடித்த கேப்டன் விராட் கோலி, இன்றைய போட்டியில் மேலும் 79 ரன்களை அடித்தால் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை குவித்த இரண்டாவது இந்தியர் மற்றும் 4வது சர்வதேச வீரர் என்ற சாதனையை மேற்கொள்ள முடியும். 

இதில் சச்சின் முதல் வீரராக 6976 ரன்களை குவித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜாக்குவஸ் காலிஸ் உள்ளனர்.