தீவிர பயிற்சியில் அதிரடி மன்னன்.... பவுலிங்கிலும் அசத்துவார் போல...

இந்நிலையில் கடந்த சில போட்டிகளில் சரிவர பந்துவீச்சில் ஈடுபடாமல் இருந்த ஹர்த்திக் பாண்ட்யா இங்கிலாந்து டி20 போட்டிக்கு ஃபுல் ஃபார்மில் களமிறங்கவுள்ளார்.

தீவிர பயிற்சியில் அதிரடி மன்னன்.... பவுலிங்கிலும் அசத்துவார் போல...

காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்த்திக் பாண்ட்யா இங்கிலாந்து டி20 தொடருக்கு தீவிரமாக பயிற்சி செய்யும் வீடியோ ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே டெஸ்ட் தொடரை அடுத்து வரும் மார்ச் 14ம் தேதி முதல் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில போட்டிகளில் சரிவர பந்துவீச்சில் ஈடுபடாமல் இருந்த ஹர்த்திக் பாண்ட்யா இங்கிலாந்து டி20 போட்டிக்கு ஃபுல் ஃபார்மில் களமிறங்கவுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்த்திக் பாண்டியாவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்த்திக் பாண்டியா, ஐபிஎல் போட்டி மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்தார். இருப்பினும் அவரால் பந்துவீச்சில் ஈடுபட முடியவில்லை. அதன் பின்னர் கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்றார். அதிலும் 2வது ஒருநாள் போட்டியில் மட்டுமே 4 ஓவர்கள் வீசினார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்காக பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ஹர்த்திக் பாண்ட்யா தயாராகி வருகிறார். தான் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள அவர், இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் 12ம் தேதி களமிறங்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக்கு பல முறை உதவியுள்ள ஹர்த்திக் பாண்ட்யா, உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இதுவரை 43 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 388 ரன்களும், 38 விக்கெட்களையும் எடுத்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி ஸ்ட்ரைக் ரேட் 149.23 ஆகும். இவரின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கியுள்ளனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0