புத்தாண்டில் புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - முகமது ஷமி
கடந்த ஆண்டில் தொடர்ந்து பல்வேறு தொடர்களில் பங்கேற்ற முகமது ஷமிக்கு இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டில் புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
தான் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் தொடர்ந்து பல்வேறு தொடர்களில் பங்கேற்ற முகமது ஷமிக்கு இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் 14ம் தேதி மும்பையில் துவங்கவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி பங்கேற்கவுள்ளார். இதற்கென தீவிர பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.