கோபத்தின் உச்சியில் கோலி.. முறைத்து பார்த்த ரோஹித்.. எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?

மிகவும் தொலைவில் இவர் கீப்பிங் நிற்பதால் அதிகமாக கேட்ச் விடுகிறார். நேற்றைய நாள் ஆட்டத்தில் கூட பண்ட் இரண்டு கேட்ச்களை விட்டார். அதேபோல் சில பந்துகளை தடுப்பதிலும் பண்ட் மோசமாக திணறினார்.

கோபத்தின் உச்சியில் கோலி.. முறைத்து பார்த்த ரோஹித்.. எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கீப்பர் பண்ட் செய்த செயல் ஒன்று இந்திய வீரர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. போட்டியின் தொடக்கத்தில் இந்தியா கொஞ்சம் சிறப்பாக பந்து வீசியது.

ஆனாலும் தற்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஜோ ரூட் , ஸ்டோக்ஸ் இருவரும் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கீப்பர் பண்ட் செய்த செயல் ஒன்று இந்திய வீரர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த போட்டியில் பண்ட் கீப்பிங் அவ்வள்வு சிறப்பாக இல்லை. அதிக முறை நிறைய தவறுகளை செய்தார்.

மிகவும் தொலைவில் இவர் கீப்பிங் நிற்பதால் அதிகமாக கேட்ச் விடுகிறார். நேற்றைய நாள் ஆட்டத்தில் கூட பண்ட் இரண்டு கேட்ச்களை விட்டார். அதேபோல் சில பந்துகளை தடுப்பதிலும் பண்ட் மோசமாக திணறினார்.

இந்த நிலையில் நேற்று நதீம் ஓவரில் ரூட் பேட்டிங் செய்த போது பண்ட் தூக்கி வீசிய பந்து ஒன்று ஓவர் த்ரோ சென்றது. தேவையில்லாமல் பண்ட் வீசிய த்ரோ காரணமாக பந்து வேகமாக பவுண்டரி சென்றது. பண்ட் சம்பந்தமே இல்லாமல் தேவையின்றி ஓவர் த்ரோ வீச அது பவுண்டரி சென்றது.

இந்த பந்து பவுண்டரி சென்றதை பார்த்ததும் கோலி கோபத்தின் உச்சிக்கே சென்றார். அதேபோல் ரோஹித் சர்மாவும் தலையில் கையை வைத்து முறைத்து பார்த்தார். இந்திய வீரர்கள் இன்னும் சிலரும் இதேபோல் கோபம் அடைந்தனர்.

பண்ட் தனது கிளவுஸ் ஈரமாகிவிட்டது என்று புகார் அளித்தார். இந்த ஓவர் த்ரோவிற்கு பண்ட் பின் மன்னிப்பும் கேட்டார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0