தோனிக்கே ஸ்ட்ரைக் தராத சிஎஸ்கே வீரர்.. பரபர சம்பவம்!

முதலில் நிதான ஆட்டம் ஆடிய ஜடேஜா, அதன் பின் அதிவேகத்தில் ஆடி அரைசதம் கடந்தார். தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தோனிக்கே ஸ்ட்ரைக் தராத சிஎஸ்கே வீரர்.. பரபர சம்பவம்!

தோனியால் முன்பு போல அதிரடி ஆட்டம் முடியவில்லை. ஹைதராபாத் போட்டியிலும் தோனி திணறினார். இந்த நிலையில், தோனிக்கே பேட்டிங் செய்ய ஸ்ட்ரைக் கொடுக்காமல் தானே முன்னின்று அதிரடி ஆட்டம் ஆடி அணியை காப்பாற்ற போராடினார் ஜடேஜா. 

முதலில் நிதான ஆட்டம் ஆடிய ஜடேஜா, அதன் பின் அதிவேகத்தில் ஆடி அரைசதம் கடந்தார். தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பந்து வீசியது. கடந்த இரண்டு போட்டிகளின் தோல்வியால் விமர்சனத்தை சந்தித்து இருந்த சிஎஸ்கே அணி பந்துவீச்சில் துவக்கத்தில் துடிப்பாக செயல்பட்டது. 

வார்னர் 28, பேர்ஸ்டோ 0, மனிஷ் பாண்டே 29, வில்லியம்சன் 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும், உள்ளூர் வீரர்கள் அபிஷேக் சர்மா 31, ப்ரியம் கார்க் 51 ரன்கள் குவித்தனர். சிஎஸ்கே அணி உள்ளூர் வீரர்களிடம் கோட்டை விட்டது. ஹைதராபாத் அணி 164 ரன்கள் குவித்தது. 

சிஎஸ்கே அணி மீண்டும் மோசமான துவக்கம் பெற்றது. வாட்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ராயுடு 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜாதவ் 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 

பாப் டுபிளெசிஸ் 22 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். தோனி - ஜடேஜா கூட்டணி அதன் பின் தோனி - ரவீந்திர ஜடேஜா கூட்டணி பேட்டிங் செய்தது. இந்த ஜோடி படு நிதானமாக ரன் சேர்த்து வந்தது. 

தேவைப்படும் ரன் ரேட் 20ஐ நோக்கி சென்றது. தோனி அப்போதும் டெஸ்ட் போட்டி போல பந்தை பந்துவீச்சாளருக்கே அடித்துக் கொண்டிருந்தார். 17வது ஓவரில் ஜடேஜா முதல் பந்தை சந்தித்தார். 

அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் ஃபோர் அடித்தார். அதன் பின் 2 ரன் ஓடினார். அந்த ஓவரின் கடைசியில் ஒரு ரன் ஓடி ஸ்ட்ரைக்கை தானே வைத்துக் கொண்டார். தோனிக்கு ஸ்ட்ரைக் தரவில்லை. 

18வது ஓவரில் முதல் மூன்று பந்துகளில் 4, 2, 6 என விடாமல் ரன் குவித்தார். 34 பந்துகளில் அரைசதம் கடந்தார் ஜடேஜா. அதற்கு அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

எனினும், அவரது அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி ஓரளவு சேஸிங்கில் முன்னேறியது.  ஜடேஜா ஆட்டமிழந்த பின் வந்த சாம் கர்ரன் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். 

அவர் 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் 19வது ஓவர் மற்றும் 20வது ஓவரில் ஸ்ட்ரைக் தராமல் ஆடி தடுமாறினார். அவரது உடல் சோர்வடைந்து காணப்பட்டது. 

தோனி 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தாலும் அவரது மோசமான அணுகுமுறையால் தோல்வி உறுதி ஆனது. சிஎஸ்கே அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது அந்த அணி தொடர்ந்து பெறும் மூன்றாவது தோல்வி ஆகும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0