உலகிலேயே நம்பர் 1.. தோனியின் மெகா ஐபிஎல் சாதனை

தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படும் நிலையில் இது மிகப் பெரும் சாதனையாகும். 

உலகிலேயே நம்பர் 1.. தோனியின் மெகா ஐபிஎல் சாதனை

தோனி உலகிலேயே ஒரே டி20 லீக் தொடரில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர் என்ற மிகப் பெரும் சாதனையை செய்துள்ளார். இந்த சாதனையை செய்துள்ள தோனி, சுரேஷ் ரெய்னாவின் முதல் இடத்தை முந்தி உள்ளார். 

தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படும் நிலையில் இது மிகப் பெரும் சாதனையாகும். 

சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடியது. இந்தப் போட்டிக்கு முன்பு வரை தோனி 193 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருந்தார். 

சுரேஷ் ரெய்னாவும் 193 போட்டிகளில் ஆடி இருந்தார். இருவரும் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். அதிக ஐபிஎல் போட்டிகள் இந்த நிலையில், ஹைதராபாத் போட்டியில் பங்கேற்ற தோனி தன் 194 வது ஐபிஎல் போட்டியில் ஆடினார். 

இதன் மூலம் அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர் என்ற சாதனையை செய்தார் தோனி. மேலும், உலக அளவிலும் சாதனை செய்தார் தோனி. 

உலகிலேயே ஒரே டி20 லீக் தொடரில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலிலும் சுரேஷ் ரெய்னாவை முந்தி முதல் இடத்தை பிடித்தார் தோனி. இந்தப் பட்டியலில் ஐபிஎல் தொடரை தாண்டி முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்று இருக்கும் ஒரே வீரர் சமித் பட்டேல். அவர் 189 டி20 பிளாஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். 

ஐபிஎல் தொடரில் இந்த சீசன் முழுவதும் ஆடவில்லை, இந்த நிலையில், தோனி சாதனையை நெருங்கும் ஒரே வீரர் ரோஹித் சர்மா தான். அவர் 192 ஐபிஎல் போட்டிகளில் ஆடி உள்ளார். இந்த சீசன் முடிவில் பிளே-ஆஃப் போட்டிகளை பொறுத்து அவர் தோனி சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. 

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா 368 சிக்ஸ் அடித்துள்ளார். ரெய்னா 311 சிக்ஸ் அடித்துள்ளார். 

தோனி 297 சிக்ஸ் அடித்து அவர்களை அடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார். தோனி 2020 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில் இந்த சாதனை முக்கியமானதாக கருதப்படுகிறது. தோனியின் பேட்டிங் குறித்தும் விமர்சனம் எழுந்து இருக்கும் நிலையில், அவர் இந்த சீசன் முடிவில் ஓய்வு பெற அதிக வாய்ப்பு உள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0