2.5 கோடி காலி.. விராட் கோலியின் ஆடி கார் கண்டம்.. சிக்கியது எப்படி? வெளியான ரகசியம்

அந்த கார் மும்பையில் ஒரு காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. அப்போது முதல் பராமரிப்பு இன்றி அந்த 2.5 கோடி கார் கண்டமாகி உள்ளது.

2.5 கோடி காலி.. விராட் கோலியின் ஆடி கார் கண்டம்.. சிக்கியது எப்படி? வெளியான ரகசியம்

விராட் கோலியின் ஆடி கார் ஒன்று மும்பை காவல் நிலையம் ஒன்றில் கண்டமான நிலையில் உள்ளது. விராட் கோலியின் கார் எப்படி காவல் நிலையத்துக்கு போனது? எந்த வழக்கில் அந்த கார் சிக்கியது? இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

அந்த ஆடி கார் தான் விராட் கோலியின் முதல் ஆடி கார் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. விராட் கோலி தற்போதைய உலகின் பணக்கார் கிரிக்கெட் வீரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். 

அவருக்கு பிடிக்த்த கார் ஆடி தான். ஆடி எந்த புதிய காரை அறிமுகம் செய்தாலும் அதை விராட் கோலி வாங்கி விடுவார். அவர் 2012இல் தன் முதல் ஆடி காரை வாங்கி இருந்தார்.

2012இல் விற்பனைக்கு வந்த ஆடி ஆர்8 மாடல் காரை தான் கோலி முதன் முதலில் வாங்கினார். அந்த கார் தான் தற்போது மும்பை காவல் நிலையத்தில் உள்ளது. அப்படி என்றால் விராட் கோலி ஏதும் வழக்கில் சிக்கினாரா? இல்லை. கோலி அந்த காரை விற்று விட்டார்.

2016இல் ஒரு இடைத் தரகர் மூலம் அந்த காரை சாகர் தக்கார் என்பவரிடம் விற்று விட்டார் விராட் கோலி. சாகர் என்ற அந்த நபர் அந்த காரை 2.5 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அவர் அந்த காரை வாங்கிய இரண்டு மாதங்களில் வழக்கு ஒன்றில் சிக்கி இருக்கிறார்.

கால் சென்டர் வைத்து ஏமாற்றியதாக வழக்கு ஒன்றில் அவர் சிக்கினார். அந்த வழக்கு தொடர்பான பொருட்களை எல்லாம் காவல் துறை கைப்பற்றியது. அப்போது விராட் கோலி விற்ற அந்த ஆடி காரும் சிக்கியது. அப்போது முதல் அந்த கார் மும்பையில் ஒரு காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.

அப்போது முதல் பராமரிப்பு இன்றி அந்த 2.5 கோடி கார் கண்டமாகி உள்ளது. விராட் கோலி விற்கும் போது உரிமையாளர் பெயர் உள்ளிட்டவற்றை சட்ட ரீதியாக மாற்றியதால் அந்த வழக்கில் சிக்காமல் தப்பித்துள்ளார். ஒருவேளை காரை விற்றாலும் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அவர் பெயரும் வழக்கில் சிக்கி இருக்கும்.

விராட் கோலி அதன் பின் பல ஆடி கார்களை வாங்கி இருக்கிறார். அவரிடம் பல விலை உயர்ந்த கார்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அவரது கார்களை குடிநீரில் கழுவியதாக அவரது பணியாளருக்கு அபராதம் விதித்தது முனிசிபாலிட்டி நிர்வாகம்.

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0