கொரோனா வைரஸ் பாஸிடிவ்.. ஆனாலும் போட்டியில் ஆட சாய்னாவுக்கு அனுமதி

எப்படி அவருக்கு அனுமதி கிடைத்தது? அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக பரிசோதனை முடிவு வெளியானால், அவரை பங்கேற்க வைப்பது ஆபத்தான விஷயம் இல்லையா?

கொரோனா வைரஸ் பாஸிடிவ்.. ஆனாலும் போட்டியில் ஆட சாய்னாவுக்கு அனுமதி

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலும் சாய்னா நேவாலை போட்டியில் ஆட அனுமதித்தது தொடர் நிர்வாகம்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஏற்கனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு நல்ல செய்தி என கூறப்படுகிறது.

எப்படி அவருக்கு அனுமதி கிடைத்தது? அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக பரிசோதனை முடிவு வெளியானால், அவரை பங்கேற்க வைப்பது ஆபத்தான விஷயம் இல்லையா?

இங்கு தான் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாய்னா நேவால் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார்.

அவருக்கு அப்போது நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அதன் பின் அவர் மீண்டு வந்து தாய்லாந்து ஓபன் தொடருக்கு தயார் ஆனார். 

இந்த நிலையில், அந்த தொடரில் தன் முதல் போட்டியில் அவர் பங்கேற்கும் முன் மீண்டும் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பதாக தெரிய வந்தது.

ஆனால், அவர் தனக்கு பாதிப்பு இருக்க வாய்ப்பே இல்லை என மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டார். அப்போதும் பாதிப்பு இருப்பதாக முடிவுகள் காட்டியது.

அதன் பின், தாய்லாந்து அரசு மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு ஆன்ட்டிபாடி பரிசோதனை செய்யப்பட்டது. அதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதை எதிர்க்கும் ஆன்ட்டிபாடி உடலில் உருவாகி இருக்கும்.

அப்படி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி ஒருவருக்கு இருந்தால் அவருக்கு அந்த நோய் தாக்க வாய்ப்பு குறைவு என கருதப்படுகிறது. அந்த ஆன்ட்டிபாடி சுமார் 90 நாட்கள் வரை உடலில் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த பரிசோதனையில் சாய்னா உடலில் ஆன்ட்டிபாடி இருப்பது உறுதியானது. எனவே, அவருக்கு உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்த தொடர் நிர்வாகம் அவரை போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தது.

இதை சில நாடுகள் எதிர்த்தாலும், ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வீரர்கள் இந்த முடிவை ஆதரித்து இருக்கின்றனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0