எந்த இந்திய வீரரும் இதுவரை செய்தது இல்லை.. முதல் தொடரிலேயே நடராஜன் பெரும் சாதனை

அதிலும் தற்போது நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் அணியே இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இரண்டு அணிகளும் இந்த தொடரில் தீவிரமாக ஆடி வருகிறது.

எந்த இந்திய வீரரும் இதுவரை செய்தது இல்லை.. முதல் தொடரிலேயே நடராஜன் பெரும் சாதனை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனதன் மூலம் தமிழக வீரர் நடராஜன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவும், டி 20 தொடரில் இந்தியாவும் வென்ற நிலையில் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

அதிலும் தற்போது நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் அணியே இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இரண்டு அணிகளும் இந்த தொடரில் தீவிரமாக ஆடி வருகிறது.

இந்திய அணியில் டெஸ்ட் அணியின் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டவர்தான் நடராஜன். இந்த நிலையில் ஒருநாள் அணியில் சைனி காயம் காரணமாக உள்ளே வந்தவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட் எடுத்து நம்பிக்கை அளித்தார்.

அதன்பின் டி 20 தொடரில் வருண் சக்ரவர்த்தி காயம் அடைந்ததால் நடராஜன் அணிக்குள் வந்தார். டி 20 தொடரில் மூன்று போட்டியிலும் நடராஜன் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். மற்ற பவுலர்களை விட நடராஜன் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

இந்த நிலையில் இன்று டெஸ்ட் போட்டியிலும் நடராஜன் அறிமுகம் ஆகியுள்ளார். பும்ரா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் நடராஜன் அணிக்குள் வந்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனதன் மூலம் தமிழக வீரர் நடராஜன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஒரு தொடரில் அறிமுகம் ஆன இந்திய வீரர், அதே தொடரில் அனைத்து விதமான இந்திய அணியிலும் அறிமுகம் ஆனது இல்லை. நடராஜன் ஒருநாள் அணியில் அறிமுகம் ஆன நிலையில் இதே தொடரில் டெஸ்ட், டி 20 போட்டியிலும் அறிமுகம் ஆகியுள்ளார். இதன் மூலம் ஒரே தொடரில் மூன்று விதமான போட்டியிலும் அறிமுகம் ஆன ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றுள்ளார்.

இதற்கு முன் எந்த இந்திய வீரருக்கும் இந்த பெருமை கிடைத்தது இல்லை. ஆனால் நடராஜன் டெஸ்ட் அணியில் நீடிக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இந்திய டி 20 அணியின் பவுலராக நடராஜன் நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

like
0
dislike
0
love
1
funny
0
angry
0
sad
0
wow
0