உலக கோப்பையை வென்றாலே திருமணம்; அதிர்ச்சியளித்த அணித்தலைவர்

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் இவர், ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பிறகுதான் திருமணம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையை வென்றாலே திருமணம்; அதிர்ச்சியளித்த அணித்தலைவர்

 டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான் உள்ளார். 

தனது மாயாஜால பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். 

தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் இவர், ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பிறகுதான் திருமணம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

அஜாதி ரேடியோவுக்கு பேட்டியளிக்கும்போது ‘‘ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற பின்னர்தான் நிச்சயதார்த்தம் மற்றும் திருணம் செய்து கொள்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரஷித் கான், வங்காள தேச அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியை முதன்முறையாக வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 

104 ரன்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகள் சாய்த்ததுடன் 51 ரன்கள் அடித்தும் வெற்றிக்கு ஊறுதுணையாக இருந்தார்.

உலக கோப்பையை வென்ற பின்னர்தான் திருமணம் என்ற ரஷித் கானை டுவிட்டர்வாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0