ஆஸியின் கேஜிஎப்பில் கால் பதித்த "ராக்கி பாய்".. ஒரே ஓவரில் மேட்சை மாற்றிய சுப்மான் 

கப்பாவில் இதுவரை ஆஸ்திரேலியாவை எந்த அணியும் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி திருத்தி எழுதுவதற்கான வாய்ப்புகள் கை கூடி வந்துள்ளது.

ஆஸியின் கேஜிஎப்பில் கால் பதித்த "ராக்கி பாய்".. ஒரே ஓவரில் மேட்சை மாற்றிய சுப்மான் 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் ஓப்பனிங் வீரர் சுப்மான் கில் ஆஸ்திரேலிய பவுலர்களை வைத்து வெளுத்து வாங்கி உள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது போட்டியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.

கப்பாவில் இதுவரை ஆஸ்திரேலியாவை எந்த அணியும் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி திருத்தி எழுதுவதற்கான வாய்ப்புகள் கை கூடி வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் சுப்மான் கில் மிகவும் அதிரடியாக ஆடி உள்ளார். 

தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கையுடன் ஆடிய சுப்மான் கில் போக போக அதிரடி காட்ட தொடங்கினார். அதிலும் ஒரு கட்டத்தில் டெஸ்ட் மோடில் இருந்து ஒருநாள் வீரர் போல சுப்மான் கில் ஆடியது ஆஸ்திரேலியாவை கலங்க வைத்தது.

முதல் 50 ரன்கள் எடுக்கும் வரை சுப்மான் கில் கொஞ்சம் நிதானம் காட்டினார். அதன்பின்தான் பவுண்டரி, சிக்ஸர் என்று அதிரடி பாதைக்கு சுப்மான் கில் திரும்பினார். ஓவருக்கு 4 ரன்கள் எடுத்தாலே வெற்றி என்ற நிலை இருப்பதால் சுப்மான் கில் எப்படியாவது இந்திய அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

முக்கியமாக மிட்சல் ஸ்டார்க் வீசிய 46வது ஓவரில் ஒரு சிக்ஸ், அடுத்தடுத்து ஹாட் டிரிக் பவுண்டரி என்று சுப்மான் கில் ருத்ர தாண்டவம் ஆடினார். ஸ்டார்க் ஓவரில் இளம் வீரர் ஒருவர் இப்படி ஆடுவார் என்பதை யாருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். 

முக்கியமான ஆஸ்திரேலியாவின் ஹசல்வுட், கும்மின்ஸ் போன்ற மாஸ் பவுலர்களை அசால்ட்டாக சுப்மான் கில் எதிர்கொண்ட விதம் கவனம் பெற்றது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தொடங்கி சர்வதேச ரசிகர்கள் வரை பலர் சுப்மான் கில்லின் இந்த ஆட்டத்தை கொண்டாடி வருகிறார்கள். 

4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் மிகவும் அதிரடியாக ஆடி வந்த சுப்மான் கில் 91 ரன்னிற்கு அவுட் ஆனார்.சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை தவறவிட்டார் கில்.

லைன் ஓவரில் தேவையின்றி ஆடி கில் அவுட்டானார். இவர் 91 ரன்னிற்கு அவுட்டானாலும் இந்திய அணியை வெற்றியை நோக்கி திருப்பி உள்ளார். அதேபோல் இந்திய டெஸ்ட் அணியிலும் நிரந்தர இடத்தை கில் பிடித்துவிட்டார். இந்திய அணியில் வரும் நாட்களில் இவர் சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.